18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சுப்பிரமணியபுரம் ரயில்வே தண்டவாளம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஒரு சிறுவன் உள்பட 7பேர் கைது.

சுப்பிரமணியபுரம் ரயில்வே தண்டவாளம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஒரு சிறுவன் உள்பட 7பேர் கைது.

எழுதியவர்: mohan December 26, 2020, 3:59 pm

மதுரை சுப்ரமணியபுரம் வெங்கடாசலபுரம் ரயில்வே தண்டவாள பகுதியில் கும்பல் ஒன்று பதுங்கி இருப்பதாக சுப்பிரமணியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்திற்கு சென்று காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமையான காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர் அப்போது அங்கு பதுங்கி இருந்தவர்களை சுற்றிவளைத்து 6 பேரை கைது செய்தனர். அவர்களில் மணி நகரத்தைச் சேர்ந்த குரு சுராஜ் 19, ஜீவா நகர் முதல் தெரு வை சேர்ந்த ஹரிஹரன் 21, ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவை சேர்ந்த அஜய் 21, புலி பாண்டியன் தெருவைச் சேர்ந்த பாலகுமாரன் 21, விளாங்குடி பொதிகை வீதியைச் சேர்ந்த ராகுல் 19, ராமையா தெருவைச் சேர்ந்த கணேஷ் சிங் 19 மற்றும் ஆண்டாள் புரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை மற்றும் வழிப்பறி செய்ய அந்த கும்பல் திட்டமிட்டு பதுங்கி இருந்ததாக தெரிய வந்தது .அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்தது. பயங்கரமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!