17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ராமநாதபுரம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி., தேர்தல் ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி., தேர்தல் ஆலோசனை கூட்டம்

எழுதியவர்: mohan December 26, 2020, 3:50 pm

எஸ்டிபிஐ கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் எம்.ஐ.நூர் ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் நெல்லை முபாரக், பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, செயலாளர் அகமது நவவி, ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் சம்பந்தமாக கருத்து உரையாடினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத்தலைவர் சுலைமான், பொதுச்செயலாளர் பரக்கத்துல்லாஹ், செயலாளர்கள் பெரோஸ் கான், முஹமது இஸ்ஹாக், ஃ செயற்குழு உறுப்பினர்கள் ரியாஸ் கான், அஜ்மல் ஷெரிப், சுபைர் ஆப்தீன், நூருல் அமீன், ஹனிப், பொருளாளர் ஹசன் அலி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜா, திருவாடானை சட்டமன்ற தொகுதி தலைவர் அபுல் கலாம் ஆசாத், ராமநாதபுரம் (கிழக்கு) தொகுதி தலைவர் நவ்வர்ஷா, ராமநாதபுரம் (மேற்கு) தொகுதி தலைவர் ஜமீல், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்டத் தலைவர் டாக்டர் ஜெமிலுன் நிஷா, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் சாதிக்குல் அமீன், எடிடியு., மாவட்ட தலைவர் முஸ்தாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும் திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலருமான பெரோஸ் கான் அனைவரையும் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தலைவர்கள் கலந்துரையாடினர். மாவட்ட துணைத்தலைவர் சுலைமான் நன்றி கூறினார்.ராமநாதபுரம் நகர் சார்பாக தலைவர் நஜீம் ஏற்பாடு செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!