18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » அணைப்பட்டியில்ஓட்டல் உரிமையாளர் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் தற்கொலை

அணைப்பட்டியில்ஓட்டல் உரிமையாளர் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் தற்கொலை

எழுதியவர்: mohan December 26, 2020, 3:40 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே நாட்டார் பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளி முத்து வயது 41. இவர் அணைப்பட்டியில் ஹோட்டல் வைத்து தொழில் செய்து வருகிறார். .இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக சில நாட்களாக வீட்டில் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தனது சொந்த ஊரில் வாடகைக்கு வீடு பிடித்து குடும்பத்தோடு தங்கி வருகிறார். இந்நிலையில் அதே ஊரில் உள்ள தனது சொந்த வீட்டில் ஓட்டு வீடு என்பதாலும் , பழுதடைந்து இருப்பதாலும் அவ்வபோது தனியாகச் சென்று தூங்குவது வழக்கம் அவ்வாறு நேற்று முன்தினம் இரவு சொந்த வீட்டில் தூங்க செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை 6 மணிவரை வீட்டிற்கு வெள்ளி முத்து வராததால் மனைவி ரஞ்சிதம் பழைய வீட்டிற்கு கணவனை எழுப்ப சென்றார். அங்கு அவர் விட்டத்தில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து ரஞ்சிதம் கூச்சல் போட அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விட்டதிலிருந்து வெள்ளி முத்துவின் உடலை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விரசோலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அணைப்பட்டியில் ஓட்டல் உரிமையாளர் அந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்த வெள்ளி முத்துக்கு ஆண் குழந்தை ஒன்றும் ,பெண் குழந்தை ஒன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!