17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் தந்தை மகள் பலி.

இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் தந்தை மகள் பலி.

எழுதியவர்: mohan December 26, 2020, 10:42 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே செந்தட்டியாபுரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி வயது 36 பில்டிங் கான்ட்ராக்டர் வேலை செய்து வருகிறார்இவரது மகன் கமலேஷ் வயது 9 மகள் சுசிகா வயது 7 இவர்கள் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அழைத்து வந்து சிகிச்சை அளித்த பின்பு இருசக்கர வாகனத்தில் திரும்பி சொந்த ஊரான செந்தட்டியபுரம் சென்று கொண்டிருந்தபோது புதிய பேருந்து நிலையம் அருகே புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே கணபதி மற்றும் அவரது மகள் சுசிகா இரண்டு பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர் மகன் கமலேஷ் பலத்த காயங்களுடன் இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்அரசு பேருந்து ஒட்டுனர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!