18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சுரண்டையில் இளம் பெண் மர்ம மரணம்-போலீசார் விசாரணை..

சுரண்டையில் இளம் பெண் மர்ம மரணம்-போலீசார் விசாரணை..

எழுதியவர்: mohan December 26, 2020, 10:22 am

சுரண்டையில் இளம் பெண் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உச்சி பொத்தை தெற்கு தெருவை சேர்ந்த வேல்சாமி என்பவரின் மகள் பூங்கோதை(20) திருப்பூர் மில்லில் வேலை செய்யும்போது ஜோகிந்தர் என்பவரை சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளார். தற்போது அங்கு வேலை இல்லாததால் ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மற்றும் மனைவி சுரண்டையில் வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளனர். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் (25.12.2020) காலை பூங்கோதையின் வீடு பூட்டப்பட்டு சாவி வெளியே இருந்ததால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டு நபர் வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டினுள் பூங்கோதை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளார். பூங்கோதையின் அருகில் கத்தி கிடந்துள்ளது. அவரது கணவர் வீட்டில் இல்லை. இதுகுறித்து அந்த நபர் சுரண்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூங்கோதையின் மர்ம மரணம் குறித்தும் பல்வேறு கோணங்களில் சுரண்டை காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!