18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நுகர்வோர் தினம் கொண்டாட்டம்

நுகர்வோர் தினம் கொண்டாட்டம்

எழுதியவர்: mohan December 25, 2020, 11:21 am

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கன்ஸ்யூமர் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பின் சார்பில் நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது விழாவில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் மோகன் அனைவரையும் வரவேற்று பேசினார். நகர தலைவர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை பி.கே.ஏழுமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஈஸி வே லாக்ஸ்டிக்ஸ் பூபதி நுகர்வோர் அமைப்பிற்கு மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பொதுமக்களுக்கு நுகர்வோர் அமைப்பின் மூலமாக நகர்வுக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் ரஃபி, ஆரணி ஒன்றிய செயலாளர் செல்வராசு, காமராஜ் ரமேஷ் ரஜினி ராஜேந்திரன் லோகேஷ் உட்பட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் துரை நன்றி கூறினார்

செய்தியாளர் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!