17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் அரசு வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் அரசு வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு

எழுதியவர்: mohan December 24, 2020, 10:56 am

நிலக்கோட்டை நேரு நகரில் வசிக்கும் இந்து அருந்ததியர் மக்கள் குடும்பத்தினர் சுமார் 100 மேற்பட்டவர்கள்  கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் இலவச பட்டா வேண்டி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளும் பல்வேறு நிலையில்  கோரிக்கை மனு கொடுத்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக ஆதித்தமிழர் மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராமன் தலைமையில் நேற்று அப்பகுதி மக்களுடன் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்குச் சென்று பட்டா வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர் .          அவரைத் தொடர்ந்து அங்கிருந்த தாசில்தார் யூஜின் அழைத்து உரிய இடத்தை ஆய்வு செய்து உரிய பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோரிக்கை குறித்து பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!