இராமநாதபுரம் மண்டபம் பேரூராட்சி திமுக., சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் கிராம சபை கூட்டம் மீனவர் காலனியில் இன்று நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் பி. குணசேகரன் தலைமை வகித்தார். நகர் செயலாளர் டி.ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா வரவேற்றார் மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் என்.பூவேந்திரன், மாவட்ட பிரதிநிதி சாதிக்பாஷா, ஒன்றிய துணை செயலர் சி.தில்லை குமார், மாவட்ட மீனவரணி முன்னாள் துணை அமைப்பாளர் அயூப் கான், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர் அமைப்பாளர் டி. வெள்ளைச்சாமி, மாணவரணி செயலாளர் தி.கோகுல் கிருஷ்ணன், வார்டு செயலர் களஞ்சியம், தண்டல் முருகானந்தம், பாலுச்சாமி, மாரிச்சாமி, தில்லை நாயகம், கிராம தலைவர் பாலுச்சாமி, தண்டல் ராஜா, உலக நாதன், சகுந்தலா, சித்ரா, சரஸ்வதி, விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முதியோர் ஓய்வூதியம், குடிநீர், சாலை வசதி தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஸ்டாலின் வரபோறாரு, விடியல் தரப்போறாரு எனும் சொற்றொடர் வில்லை திமுக., வினர் அலைபேசிகளில் ஒட்டப்பட்டது. திமுகவில் இணையுங்கள் என 91710 91710 என்ற அலைபேசி எண்ணுடன் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படம் அச்சிட்ட 2021 பாக்கெட் காலண்டர் வீடுகள் தோறும் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக., அரசு மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள அவலங்களை போக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களுக்கு நல்லாட்சி தரும் திமுக., ஆட்சி இன்னும் சரியாக 5 மாதங்களில் அமையப் போகிறது. அப்போது அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளுக்கு காணப்படும். அதிமுகவை நிராகரிப்போம் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது என்றார்.
அதிமுக., வை நிராகரிப்போம்.மண்டபம்திமுக., சார்பில் கிராம சபை கூட்டம
எழுதியவர்: mohan December 23, 2020, 6:10 pm




You must be logged in to post a comment.