18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிவஞானபுரத்தில் பொதுமக்களுக்கு இலவச துணை மருத்துவமனை துவக்க விழா

சிவஞானபுரத்தில் பொதுமக்களுக்கு இலவச துணை மருத்துவமனை துவக்க விழா

எழுதியவர்: mohan December 23, 2020, 3:10 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக சிவஞானபுரம் ஊராட்சி நிருவாகமும், ஆம்வே நிறுவனமும் மதுரை மீனாட்சி நிறுவனமும் இலவச துனண மருத்துவமனை இணைந்து துவங்கப்பட்டது. இந்த துணை மருத்துவமனையை குல்லிசெட்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர். வைகை பாலன் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். சிவஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி முன்னிலை வகித்தார். கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய முன்னாள் உதவிப் பொறியாளர் பொன்னுத்துரை வரவேற்று பேசினார். இவ்விழாவில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி . ஆர். ராஜேந்திரன், , கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள் சீனியாபிள்ளை, ஆறுமுகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!