17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஈவிகேஎஸ் பிறந்த நாள்:

ஈவிகேஎஸ் பிறந்த நாள்:

எழுதியவர்: mohan December 23, 2020, 9:48 am

காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 74-வது பிறந்த நாள் விழா மதுரையில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் கணேஷ் பாண்டி வரவேற்றார். வடக்கு மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் மாணிக்கம், மலைச்சாமி, மாவட்ட மகளிரணி தலைவர் ஷானவாஸ் பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் வழங்கினார். சுப்பு நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!