17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கையில் இருந்துதனுஷ்கோடிக்கு சட்ட விரோதமாக வந்தவரிடம் விசாரணை

இலங்கையில் இருந்துதனுஷ்கோடிக்கு சட்ட விரோதமாக வந்தவரிடம் விசாரணை

எழுதியவர்: mohan December 22, 2020, 10:55 am

இலங்கை தலைமன்னாரைச் சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் 36. இவர், இலங்கை போரின்போது அகதியாக தமிழகம் வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி, பெயின்டிங் வேலை செய்தார். சிவபிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் முஜிபுர் ரஹ்மான் 2019 டிச.26 ல் மண்டபம் முகாமில் இருந்து மர்மப் படகில் இலங்கைக்கு சட்ட விரோதமாக சென்றார். இதனையடுத்து, இலங்கையில் இருந்து ரூ.60 ஆயிரம் கொடுத்து மர்மப்படகு மூலம் தனுஷ்கோடி வந்தார். மண்டபம் அகதி முகாமில் இருந்து இலங்கை சென்று விட்டு தமிழகத்திற்கு மீண்டும் வந்த முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இலங்கை மன்னாரில் இருந்து முஜிபுர் ரகுமானை தனுஷ்கோடிக்கு சட்ட விரோதமாக அழைத்து வந்த படகு ஓட்டியை இலங்கை கடற்படையினர் தலைமன்னாரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!