17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரூராட்சிகளில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்:

பேரூராட்சிகளில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்:

எழுதியவர்: mohan December 21, 2020, 11:11 am

மதுரையில் நடைபெற்றபேரூராட்சி பணியாளர் சங்க இணைப்பு விழாவில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.பேரூராட்சிகளில் பணியாற்றும் கணினி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.இக் கூட்டத்துக்கு, தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கத் தலைவர் பி.கே. சிவக்குமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் இரா. பிச்சை முத்து, பொதுச் செயலாளர் இரா. கோபிநாத், மாநில நிர்வாகி பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டத் தலைவர் த. பரமசிவம் வரவேற்றார்.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்ரமணியன், பேரூராட்சி பணியாளர் சங்கத்தை முறைப்படி அரசு பணியாளர் சங்கத்துடன் இணைத்து வைத்து சிறப்புரையாற்றினார்.அவர் பேசியது:அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசிடம் போராடி பெற்றுத் தருகிறோம்.மேலும், தொகுப்பூதிய ஊழியர்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றி தந்துள்ளோம் என்றார்.மாநில நிர்வாகி முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.பேரூராட்சி பணியாளர் சங்க மாவட்டச் செயலர் இரா. ஆறுமுகம் நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!