18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செப்டிக் டேங்க் கழிவு நீரை கால்வாயில் கொட்டும் தனியார் லாரி… மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை….

செப்டிக் டேங்க் கழிவு நீரை கால்வாயில் கொட்டும் தனியார் லாரி… மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை….

எழுதியவர்: ஆசிரியர் December 19, 2020, 11:33 pm

மதுரை மாவட்டம் மாநகராட்சி மண்டல அலுவலகம் 1 எதிரே உள்ள வார்டு நம்பர் 14 மாப்பாளையம் சாலை ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகம் ஒட்டி உள்ள கால்வாயில் பாரத் என்னும் தனியார் கழிவுநீர் இயக்கும் லாரி தொடர்ச்சியா கழிவுகளை வாய்க்காலில் கொட்டி சொல்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றத்துடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட தனியார் கழிவுநீர் வாகனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் புகைப்படம் எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளரின் பொதுமக்களை மிரட்டும் தோணியில் ஓட்டுனர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!