18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மீனவ பெண்களுக்கான ஊடக கல்வி பயிற்சி.

மீனவ பெண்களுக்கான ஊடக கல்வி பயிற்சி.

எழுதியவர்: mohan December 19, 2020, 2:38 pm

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளையை அடுத்த சிங்கிவலைகுச்சு மீனவ கிராமத்தில் ஊடக கல்வி பயிற்சி நடைபெற்றது, இன்றைய சூழலில் ஊடகங்கள் எவ்வாறு செய்திகளை பரப்புகிக்கொண்டு இருக்கின்றன இதைப்பற்றிய புரிதல் மக்களுக்கு கண்டிப்பாக இருக்கவேண்டும்.

செய்திக்கும் கருத்திற்கும் என்ன வித்தியாசம், போலியான செய்திக்கும் தவறான செய்திக்கும் என்ன வித்தியாசம், சரியான செய்தியை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகள் என்ன, அைத எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற பங்கேற்பாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது, டேட்டாலீட்ஸ் நிறுவனம் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சியில் 50 ற்கும் மேற்பட்ட மீனவ பெண்கள், வளரிளம் பெண்கள் கலந்து கொண்டனர். பேக்ட்சாலா பயிற்றுநர் வனராஜன் பயிற்சியாளித்தார், பாம்பன் கோரல்பவுண்டேஷன் இயக்குனர் இராமு, திட்டஒருங்கிணைப்பாளர் ஜோதி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!