18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ரயில்வே மேம்பாலம் பணிகள் விரைந்து முடிக்க கோரி திமுகவினர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ரயில்வே மேம்பாலம் பணிகள் விரைந்து முடிக்க கோரி திமுகவினர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan December 18, 2020, 5:28 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ரயில்வே மேம்பாலம் அமைக்கப் பணி நீட்ட நாட்கலாகவே நடைபெறவில்லை மேலும் நிலம் கையகபடுத்தப்பட்டு அதற்க்கு உரிய பணத்தை நில உரிமையாளர் களுக்கு பணம் வழங்க பணம் அரசிடம் இருந்து வட்டாட்சிருக்கு வந்த நிலையில் இன்னும் காலதாமதம் செய்வதை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் வட்டாட்சியர் அவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு சாலை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கையை வழியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டு தமிழக அரசு, மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை வசதிகள் மற்றும் ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செய்தியாளர் வி காளமேகம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!