17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லஞ்ச வழக்கில் தண்டனைபெற்ற லஞ்ச ஒழிப்புதுறை காவல்ஆய்வாளர் மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை..!!

லஞ்ச வழக்கில் தண்டனைபெற்ற லஞ்ச ஒழிப்புதுறை காவல்ஆய்வாளர் மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை..!!

எழுதியவர்: mohan December 18, 2020, 5:07 pm

சிவகங்கை மாவட்டம் அம்பலத்து பட்டியைச் சேர்ந்த பெருமாள்பாண்டி (54 )என்பவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை காவல் ஆய்வாளராக பணிபுரிந்துவந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு லஞ்சம் வழக்கில் அரசு மருத்துவரை விடுவிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புதுறையினர் வழக்குபதிவு செய்து வழக்கானது,நேற்றைய முன்தினம் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டத்தையடுத்து ஜாமினில் வெளியில் வந்திருந்தார்,இந்நிலையில் இன்று காலை மதுரை தத்தனேரி ஈஎஸ்ஐ மருத்துவமனை அருகேயுள்ள நேரு தெருவில் உள்ள தனது வீட்டில் மனைவி உமா மீனாட்சியுடன்(46) மாநகராட்சி பள்ளி ஆசிரியை ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுத்தியலால் தாக்கியுள்ளார்,இதில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்,இதனால் அதிர்ச்சியடைந்த பெருமாள்பாண்டி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்,இதையடுத்து அருகில் உள்ளவர்கள் செல்லூர் காவல்துறைக்கு அளித்த தகவலையடுத்து காவல்துறை உடலை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்,முன்னாள் ஆய்வாளர் பெருமாள்பாண்டிக்கு நேற்றைய முன்தினம் 3ஆண்டு சிறை தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாமினில் வெளியில் வந்திருந்த நிலையில்மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!