18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் கிராமியக் கலைஞர்கள் நலச் சங்கம் துவக்க விழா

நிலக்கோட்டையில் கிராமியக் கலைஞர்கள் நலச் சங்கம் துவக்க விழா

எழுதியவர்: mohan December 18, 2020, 4:28 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டார நாதஸ்வரம், தவில் நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் நலச் சங்கம் துவக்க விழா நிலக்கோட்டை அ. தி. மு. க கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது. அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். சிவப்பு அழைப்பாளராக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் கலந்து கொண்டு சங்கப் பலகை திறந்து வைத்து நாதஸ்வரம் மற்றும் தவில் நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் சுந்தரம், நாதஸ்வரக் கலைஞர்கள் கணேசன் தட்சிணாமூர்த்தி தவில் கலைஞர்கள் ரவிச்சந்திரன், லோகமணி உட்பட நிலக்கோட்டை வட்டாரத்தில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் நிலக்கோட்டை வட்டார அனைத்து கலை சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மைக் உசேன் நன்றி கூறினார். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!