எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் (டிசம்பர் 18, 1890ல் அமெரிக்காவின் நியூயார்க், செல்சியா என்ற இடத்தில் பிறந்தார். இவரின் அப்பா பெயர் ஜான், அம்மாவின் பெயர் எமிலி ஆகும். இவரின் அப்பா ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்ஸில் வேலை செய்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தீட்டா ஜி பற்றிய பாடத்தை எடுத்துப்படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். அவர் படித்த கொலம்பியா பல்கலைக்கழக்கத்திலேயே முதலில் பேராசிரியராகப் பணிபுரிந்தர். அதன் பின்பு முதல் உலகப்போரின் போது சமிக்ஞை அதிகாரியாக சேவை செய்தார். எப்.எம் வானொலியைக் கண்டுபிடித்த இவர் 1935ஆம் ஆண்டு நியூஜெர்ஸி மாநிலத்தில் ஒலிபரப்பு செய்தார். அதன் பின்னர் இவரின் தயாரிப்பைப் பல தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன. ஆனால் அதற்கான உரிமைத்தொகையைத் தராமல் அலைக்கழித்தார்கள். இதனால் நீதிமன்றம் சென்றார். நிம்மதியை இழந்தார். நீதிமன்றத்தில் இவருக்குச் சாதகமாகவே தீர்ப்பு வந்தது. ஆனாலும் எப்.எம் என்பது பற்றி யாருக்கும் புரியவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
உலகின் முதல் பண்பலையைக் (F.M) வானொலி ஒலிபரப்பு கண்டுபிடித்த எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 18, 1890).
எழுதியவர்: mohan December 18, 2020, 4:16 pm




You must be logged in to post a comment.