17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » T.புதுப்பட்டி கிராமத்தில் பூட்டிய வீட்டை உடைத்து ரூ. 12000 திருட்டு

T.புதுப்பட்டி கிராமத்தில் பூட்டிய வீட்டை உடைத்து ரூ. 12000 திருட்டு

எழுதியவர்: mohan December 17, 2020, 10:30 am

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா டி.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகவனிதா வயது 39 இவர் கோயமுத்தூரில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நவம்பர் 26ஆம் தேதி குடும்பத்துடன் கோயம்புத்தூர் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று டீ புதுப்பட்டி வீட்டின் அருகே நாக வனிதாவின் உறவினர் மகாலட்சுமி தொலைபேசி மூலம் அழைத்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக கோயமுத்தூரில் இருந்து மதுரை வந்த நாகவனிதா வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூபாய் 12,000 பணம் திருடப்பட்டது தெரியவந்தது இதனை அடுத்து சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய் 12,000 திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!