18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிலைமான் நான்குவழிச்சாலை அருகே பிடி தரவில்லை என 60 வயது முதியவரை கொலை செய்ய முயற்சித்த 3 மர்ம நபர்கள்

சிலைமான் நான்குவழிச்சாலை அருகே பிடி தரவில்லை என 60 வயது முதியவரை கொலை செய்ய முயற்சித்த 3 மர்ம நபர்கள்

எழுதியவர்: mohan December 16, 2020, 6:41 pm

மதுரை மாவட்டம் சிலைமான் நான்குவழிச்சாலை அருகே உணவகம் நடத்தி வருபவர் ராஜமூர்த்தி வயது 57 இவரது உணவகத்தில் பாதுகாவலராக கணேசன் 60 என்பவர் பணிபுரிந்து வருகிறார் நேற்று கடை முடிந்து இரவு கணேசன் கடையின் உள்ளே இருந்துள்ளார் அப்போது அப்பகுதியில் வந்த 3 மர்ம நபர்கள் கடையில் இருந்த கணேசனிடம் பீடி தரும்படி கேட்டுள்ளனர். கடை முடிந்துவிட்டது என கணேசன் கூற அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர் தகராறு கைகலப்பாக மாறி கணேசனை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் மூன்று நபர்கள் தாக்கியுள்ளனர் இதில் பலத்த காயமடைந்த கணேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் உணவகத்தின் உரிமையாளர் ராஜமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கணேசனை தாக்கிய 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!