17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகப் பகுதியில்பல ஆண்டுகளாக தேங்கிக்கிடந்த சாக்கடைகள் அகற்றும்

நிலக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகப் பகுதியில்பல ஆண்டுகளாக தேங்கிக்கிடந்த சாக்கடைகள் அகற்றும்

எழுதியவர்: mohan December 16, 2020, 6:04 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து நால்ரோடு வரை கடந்த பல ஆண்டுகளாக சாக்கடை வெளியேற்றப்படாமல் தேங்கிக் கிடந்தது. இவ்வாறு தேங்கிக் கிடந்தது சாக்கடையால் தொற்றுநோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக இதனை அகற்ற கோரி பொதுமக்கள் அலுவலகப் பணியாளர்கள் பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பு கலையரசி தலைமையிலும், நிலக்கோட்டை சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் மேற்பார்வையிலும் நேற்று ராட்சச இயந்திரங்கள் மூலமாக சாக்கடையை உடைப்பு நீண்ட நாட்களாக தேங்கிக்கிடந்த சாக்கடையை அகற்றும் பணியை தொடங்கினார்கள். அதன் காரணமாக இப்பகுதி பொதுமக்கள் வரவேற்பு மகிழ்ச்சியும் அடைந்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!