18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை கூடக்கோயில் அருகே உள்ள கண்மாயில் குளிக்கச் சென்ற இரு குழந்தைகள் நீரில் மூழ்கி பலி..

மதுரை கூடக்கோயில் அருகே உள்ள கண்மாயில் குளிக்கச் சென்ற இரு குழந்தைகள் நீரில் மூழ்கி பலி..

எழுதியவர்: ஆசிரியர் December 15, 2020, 9:04 pm

மதுரை அருகே உள்ள கூடக் கோயில் கிராமத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த அக்கா, தம்பி இருவர் கண்மாயில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

மதுரை அவனியாபுரம் சேர்ந்த சங்கிலி கருப்பன் இவரது சகோதரர் காமராஜின் குடும்பத்தினர் திருமங்கலம் அருகே கூடக்கோவில் கிராமத்தில் உள்ள சங்கிலிமாதா திருக்கோவிலுக்கு சாமி கும்பிட இப்பகுதியில் வந்துள்ளனர்.

இந்நிலையில் சங்கிலிமுருகன் மகள் யாழினி(12) காமராஜ் மகன் குணா(12) இருவரும் கோவில் அருகே கண்மாயில் யாரிடமும் சொல்லாமல் குளிக்கச் சென்றனர். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!