17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “கீழை நியூஸ்” செய்தி எதிரொலி… விரைந்து சீர் செய்ய உத்தரவிட்ட மதுரை ஆணையர்….

“கீழை நியூஸ்” செய்தி எதிரொலி… விரைந்து சீர் செய்ய உத்தரவிட்ட மதுரை ஆணையர்….

எழுதியவர்: ஆசிரியர் December 15, 2020, 8:31 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு சர்ச் எதிரே புதிதாய் போடப்பட்ட சாலையில் திடீரென்று நேற்று (14/12/2020) மாலை சுமார்  எட்டு அடி ஆழத்திற்கு பள்ளம் ஒன்று விழுந்தது.  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கீழை நியூஸ் மதுரை மாவட்ட செய்தியாளர் மூலமாக செய்தி  வெளியிடப்பட்டு அரசு அதிகாரிகளில் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனடிப்படையில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின் பேரில் 75 வது வார்டு அதிகாரி விஜயகுமார் இன்று (15/12/2020) காலை முதல் மாலை வரை  எந்திரம் கொண்டு பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.  உரிய நேரத்தில் செய்தி வெளியீடு மிகப் பெரிய அபாயத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்றி,  பள்ளத்தை சரி செய்ய உதவிய கீழை நியூஸ் இணையதள செய்தி தளத்திற்கும், மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!