18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜெய்ஹிந்த்புரத்தில் வாள்முனையில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த ரவுடிகள் கைது.

ஜெய்ஹிந்த்புரத்தில் வாள்முனையில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த ரவுடிகள் கைது.

எழுதியவர்: mohan December 15, 2020, 12:48 pm

மதுரை ஜெய் ஹிந்து புரத்தில் வாலிபரை வழிமறித்து வாள் முனையில் மிரட்டி பணம் பறித்த ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.மதுரை ஜெய்ஹிந்த்புரம் எம்கே புரத்தை சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திகேயன் 25 .இவர்அதே பகுதியில் சென்றபோது ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்த ரவுடிகள் மணிகண்டன் 30 ஜீவா நகர் சோனியா கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மொட்டைமணி 26 இவர்கள் இருவரும் கார்த்திகேயனை வழிமறித்து வாள் முனையில் மிரட்டி ரூபாய் ஆயிரத்து 350ஐபறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் 30 மணி கண்டன் என்ற மொட்டைமணி26 இருவரையும் கைது செய்தனர்..செய்தியாளர்.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!