18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிலுக்குவார்பட்டியில் பா. ம. க. வினர் ஆர்ப்பாட்டம்

சிலுக்குவார்பட்டியில் பா. ம. க. வினர் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan December 15, 2020, 11:53 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் பாமக கட்சி சார்பாக மாவட்ட தலைவர் மணி தலைமையில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கிட கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் விஜயகுமார் ராதாகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன்,வழக்கறிஞர் மாநில பிரிவு நிர்வாகி கார்த்திக், ஒன்றிய பொறுப்பாளர்கள் பாண்டியன் , சேவியர் அருள்தாஸ், சௌந்தர்ராஜன், சப்பானி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிர்வாகிகள் அனைவரும் ஒன்றியத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களை சந்தித்து 20 சதவீத ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கியது குறித்து அறிக்கை வேண்டும் எனக்கூறி மனுக்கள் அளித்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!