17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையில் திடீர் பள்ளம்… கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…..

சாலையில் திடீர் பள்ளம்… கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…..

எழுதியவர்: ஆசிரியர் December 14, 2020, 11:10 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 பக்கம் 76 ஆவது வார்டு உட்பட்ட சர்ச் அருகே மாடக்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சில நாட்களில் அந்த சாலை பழுதாகி கற்கள் பெயர்ந்து வெளியே வந்ததுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்த பின் அதிகாரிகள் பெயரளவிற்கு மேலே கான்கிரீட் கலவையை கொட்டி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று (14/12/2020)காலை திடீரென சுமார் 8 அடிக்கு மேல் திடீர் பள்ளம் விழுந்து உள்ளது. இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்படும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் அந்தப் பள்ளத்தில் ஒரு மரக்கிளை எச்சரிக்கைக்காக வைத்த நிலையில் சிறிது சிறிதாக பெரிதாகி வருகிறது. ஆகையால் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் இந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி கனரக வாகனம் மற்றும் அரசு பேருந்துகள் இருசக்கர வாகனங்களும், பொதுமக்களும் அச்சத்துடனே சென்று வருகிறார்கள். மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!