ராமநாதபுரம் அருகே காரிக்கூட்டத்தில் மீலாது பெருவிழா நடைபெற்றது. காரிக்கூட்டம் முஸ்லிம் ஜமாத் தலைவரும், சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான டாக்டர் எஸ்.எம்.நூர் முகமது தலைமை வகித்தார். பொருளாளர் ( செயலாளர்) எஸ்.எம்.கே. ஜபருல்லாகான் மற்றும் ஜமாத்தார்கள் , ஹிதாயா இஸ்லாமிய இளைஞர் சங்கத்தினர் முன்னிலை வகித்தனர். மதரஸா மாணவர் முகமது அஃப்ரோஸ் பின் முகமது சுல்தான் கிரா அத் ஓதினார். காரிக்கூட்டம் இமாம் மௌலானா மௌலவி ஹாபிழ் எம். ஹிதாயத்துல்லாஹ் நாஃபிஈ துவக்கவுரை ஆற்றினார். கழுகூரணி இமாம் மௌலானா மௌலவி எம்.சேக் அப்துல்லாஹ் நாஃபிஈ சிறப்புரை ஆற்றினார். காரிக்கூட்டம் ஹிதாயா இஸ்லாமிய இளைஞர் சங்கம் சார்பில் டி. முஹது பைசல் கான் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காரிக்கூட்டம் முஸ்லிம் ஜமாத், மலேசியா காரிக்கூட்டம் முஸ்லிம் ஜமாத்தார், ஹிதாயா இஸ்லாமிய இளைஞர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ராமநாதபுரம் அருகே மீலாது பெருவிழா
எழுதியவர்: mohan December 14, 2020, 11:02 am




You must be logged in to post a comment.