17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நெல்லையில் கொரோனாவால் உயிரிழந்த உதவி ஆய்வாளர் நினைவாக நூலகத்துடன் கூடிய புறக்காவல் நிலையம் திறப்பு…

நெல்லையில் கொரோனாவால் உயிரிழந்த உதவி ஆய்வாளர் நினைவாக நூலகத்துடன் கூடிய புறக்காவல் நிலையம் திறப்பு…

எழுதியவர்: mohan December 14, 2020, 10:52 am

நெல்லையில் கொரோனாவில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் முருகன் நினைவாக நூலகத்துடன் கூடிய புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.கொரோனா நோய்தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி 12.09.2020-ம் தேதியன்று, உயிர்நீத்த தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் முருகன் நினைவாக தச்சநல்லூர் கரையிருப்பில் அவரது குடும்பத்தினர் ஏற்பாட்டில் நூலகத்துடன் கூடிய புறக்காவல் நிலையம் கட்டப்பட்டு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக் M.டாமோர் IPS ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.தொடர்ந்து அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த புறக் காவல் நிலையத்தை சுற்றி வசிக்கும் மாணவர்கள் போட்டி தேர்வு எழுத உதவும் வகையில் தேவையான 400 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன . மாணவர்கள் தங்கள் முகவரி , போன் நம்பர் அளித்து ஒரு சமயத்தில் இரண்டு புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வேளாண்மை,உணவு, தன்னம்பிக்கை, வாழ்க்கை வரலாறு, அறிவியல் தொடர்பான புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.புறக் காவல் நிலையத்தை சுற்றி மரக்கன்றுகளும் நடப்பட்டது. சிறப்பாக ஏற்பாடுகள் செய்த டவுண் உட்கோட்ட காவல் உதவி ஆணையாளர் சதீஷ்குமார் மற்றும் தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் ஆகியோருக்கு நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) ச. சரவணன் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!