17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாப்பாபட்டி – காளியம்மன் கோவிலில் கிராமம் செழிக்க முளைப்பாரி எடுத்து வழிபாடு நடத்திய பெண்கள்.

பாப்பாபட்டி – காளியம்மன் கோவிலில் கிராமம் செழிக்க முளைப்பாரி எடுத்து வழிபாடு நடத்திய பெண்கள்.

எழுதியவர்: mohan December 13, 2020, 12:00 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாட்டி கிராமத்தில் அருள்மிகு பழமையான காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத சிவராத்திரையை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று காளியம்மன் கோவிலில் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடந்து கிராமம் செழிக்கவும், மழை வேண்டியும் கிராமத்தில் உள்ள பெண்கள் முளைப்பாரி எடுத்து தலையில் சுமந்துபடியே ஊர்வலமாக சென்று கோவிலை சென்றடைந்து வழிபாடு நடத்தினர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!