17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் திமுக கட்சி சார்பாக “தமிழகம் மீட்போம்” நிகழ்வு..

கீழக்கரையில் திமுக கட்சி சார்பாக “தமிழகம் மீட்போம்” நிகழ்வு..

எழுதியவர்: ஆசிரியர் December 12, 2020, 9:56 pm

தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் பல யுத்திகளை பின்பற்றி வருகின்றனர், இதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் திமுக கட்சியின் அரசியல் மீட்பு திட்டமான தமிழகம் மீட்போம் எனும் திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட திமுகவினரோடு காணொளிகாட்சி மூலம் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சி கீழக்கரை உசைனியா திருமண மஹாலில் இன்று (12/12/2020)  நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலமாக உரையாற்றிய மு க ஸ்டாலின் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கலைஞர் முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை பற்றி மீண்டும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுகொண்டு வரப் போகிற திட்டங்களைப் பற்றியும் பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சி கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமையிலும்,  வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் நகர் அவைத்தலைவர் மணிகண்டன், துணைச்செயலாளர் ஜமால் பாரூக், கென்னடி, நகர் மாணவரணி செயலாளர் இப்திகார் ஹசன், திமுக பிரமுகர் சதக் இலியாஸ், கெஜி, முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் ஹாஜா முகைதீன், மாவட்ட பிரதிநிதி மரைக்கா,மக்கள் டீம் காதர்,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சாகுல் ஹமீது, 500 பிளாட் பகுருதீன், மரகபா சித்திக், தகவல் நுட்பபிரிவு அமைப்பாளர் முகம்மது ஹாஜா சுஐபு,பயாஸ், நைம் உட்பட ஏராளமான நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!