17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கல்வி » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை அல் பையினா மெட்ரிக் பள்ளியில் பெற்றோருக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழக்கரை அல் பையினா மெட்ரிக் பள்ளியில் பெற்றோருக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

எழுதியவர்: ஆசிரியர் October 22, 2017, 12:51 am

அல் பையினா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஆக்சஸ் இந்தியா நிறுவனம் இணைந்து பெற்றொர்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் பயிலரங்கம் நிகழ்ச்சி இன்று (21-10-2017) மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் அல் பையினா பள்ளிகூடத்தின் சட்ட ஆலோசகர் முகம்மது சாலிஹ் ஹூசைன் தொகுப்புரை வழங்கினார். பள்ளியின் மாணவி பத்தீன் ரஹா கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். அல் பையினா அகாடமி முதல்வர் செய்யது ஜமாலி வரவேற்ப்புரை ஆற்றினார். அல் பையினா கல்வி குழுமத்தின் தாளாளர் ஜாபீர் சுலைமான் தலைமையுரை ஆற்றினார்.

ஆக்ஸஸ் இந்தியா மாநில ஒருங்கினைப்பாளர் காதீர் அலி சிறப்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் குழந்தைகளை இறைவன் நமக்கு வகுத்து தந்த வழியில் நல்லொழுக்கத்துடனும், நற்பண்புகளுடனும், ஆரோக்கியமாகவும், அறிவிற் சிறந்தவர்களாகவும் வளர்க்கும் கலையினை பெற்றோர்களுக்கு குறும்படம்(MS POWER POINT)மூலம் சிறப்பாக விளக்கி உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளியின் நிர்வாக அதிகாரி ஹமீது பைசல் நன்றியுரை ஆற்றினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பயனுள்ள முறையில் வாழ்க்கைக்கு உதவும் வகையில் சிறப்பாக இருந்ததாக நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!