17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் “அமலாக்கத்துறையே ! ஆர் எஸ் எஸ் – ன் கைப்பாவையாக செயல்படாதே!” பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..

கீழக்கரையில் “அமலாக்கத்துறையே ! ஆர் எஸ் எஸ் – ன் கைப்பாவையாக செயல்படாதே!” பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் December 12, 2020, 12:34 am

அமலாக்கத்துறையே ! ஆர் எஸ் எஸ் – ன் கைப்பாவையாக  செயல்படாதே! என்ற முழக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் தழுவிய  போராட்டம் இன்று (11/12/2020) நாடு முழுவதும் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை லெப்பை டீ கடை அருகில் முஸ்லீம் பஜாரில் 11-12-2020 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் டிவிஷன் தலைவர் Er.ஹமீதுசாலிஹ் தலைமையில் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர் செயலாளர் ஹுசைன் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் முஹம்மது மன்சூர், மாவட்ட செயலாளர் செய்யது முஹம்மது இப்ராஹிம் முன்னிலை வகித்தனர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில்  SDPI கீழக்கரை நகர் தலைவர் ஹமீது பைசல் அவர்கள், பெரியார் பேரவை ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகேஸ்வரன் அவர்கள், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பாஸ்கரன் அவர்கள் ,வீராகுல தமிழர்கள் பேரவை தோழர் கீழை பிரபாகரன், INTJ மாநில துணைத்தலைவர் முனீர் அவர்கள், மற்றும் TMMK மாவட்ட துணைத்தலைவர் முகம்மது பாதுஷா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டபொதுகுழு உறுப்பினர்  அண்ணல்முஹம்மது அவர்கள் அமலாக்க துறையின் சட்ட விரோத போக்கையும், அது எப்படி RSS ன் கைப்பாவையாக மாறி செயல் படுகிறது என்பதை எடுத்துக் கூறி பாசிச பாஜகவுக் கெதிரான கண்டனத்தை பதிவு செய்தார். பாப்புலர் ஃப்ரண்ட் நகர் தலைவர் அஹமதுநதீர் அவர்கள் கண்டன கோசம் எழுப்பினார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல் வீரர்கள், கீழக்கரை ஜமாஅத்  நிர்வாகிகள்,  SDPI , SDTU மாவட்டம் தொகுதி நகர கிளை நிர்வாகிகள், INTJ, NTF, TMMK நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அமலாக்கத்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் டிவிஷன் செயலாளர் சிராஜ் நன்றி உரையாற்றினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!