18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

எழுதியவர்: mohan December 10, 2020, 3:57 pm

திருவண்ணாமலை மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களின் 74வது பிறந்த நாள் விழாவையொட்டி காக்கங்கரை விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது பின்னர் துக்காப்பேட்டை ஆற்காடு லூதரன் திருச்சபையில் சிறப்பு வழிபாடு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் செங்கம். ஜி.குமார் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மார்க்கெட் குமார், மாநில இளைஞர் அணி மோகன் ,வட்டாரத் தலைவர் சுப்பிரமணி, செங்கம் நகர தலைவர் ஆசை முஷீர் ,டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமி, மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் எல்ஐசி பாரதி ,செங்கம் நகர தலைவர் கோலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!