மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் விவசாயிகள் எழுச்சி மிக்க தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தென்காசி மாவட்டம் சுரண்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் பேருந்து நிலையம் முன்பு நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் போஸ் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் வீகேபுதூர் தாலுகா செயலாளர் ஐயப்பன், கீழப்பாவூர் சிபிஐ வேலு, ஆலங்குளம் மூர்த்தி, சுதா, மேலப்பாவூர் மாரியப்பன், வெள்ளகால் ராஜ்குமார் உள்ளிட்ட 30 பேர் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர்.பின்னர் பஸ் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னி வளவன், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோர் கைது செய்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இ.கம்யூனிஸ்ட் பஸ் மறியல்;30 பேர் கைது..
எழுதியவர்: mohan December 10, 2020, 10:00 am




You must be logged in to post a comment.