17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலைகள் பெயர்ந்தது… வியாபாரிகள் வருமானம் காலியானது.. ஆழ்ந்த நித்திரையில் மதுரை மாநகராட்சி…..

சாலைகள் பெயர்ந்தது… வியாபாரிகள் வருமானம் காலியானது.. ஆழ்ந்த நித்திரையில் மதுரை மாநகராட்சி…..

எழுதியவர்: ஆசிரியர் December 9, 2020, 5:05 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 83 வது வார்டு வடக்கு கிருஷ்ணன்கோவில் அருகே உள்ளே உள்ளது வடுககாவல் கோவில் தெரு உள்ளது. இப்பகுதியில் பல் வேறு சிறு தொழில் வியாபாரிகள் உள்ளனர்.

இந்த பகுதியில் கடந்த வாரங்களுக்கு முன்னர் பெய்த மழையால் சாலைகள் முழுவதும் சேதம் அடைந்து, பதிக்கப்பட்டிருந்த ஹாலோபிளாக் கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் நடந்து  செல்ல முடியாத அளவுக்கு  சேறும், சகதியுமாக மாறி உள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தகவல் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.  அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்தும் மெத்தன போக்கை செயல்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.  மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக தலையிட்டு இந்த பாதையை உடனடியாக சரி செய்து தருமாறு வியாபாரிகளும் பொதுமக்களும் கேட்டுக் கொண்டுள்ளார்கள் நடவடிக்கை எடுப்பாரா??? மாநகராட்சி ஆணையாளர் எதிர்பார்ப்புடன் வியாபாரிகளும் பொதுமக்களும்.

செய்தியாளர். வி.காளமேகம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!