18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில்சோனியா காந்தி பிறந்த நாள் கோயிலில் பிரார்த்தனை. விவசாய கருவிகள் வழங்கல்

ராமநாதபுரத்தில்சோனியா காந்தி பிறந்த நாள் கோயிலில் பிரார்த்தனை. விவசாய கருவிகள் வழங்கல்

எழுதியவர்: mohan December 9, 2020, 1:44 pm

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டது. விவசாய வேலைகளுக்கான மண் வெட்டி, கதிர் அரிவாள், களையெடுப்பு உபகரணங்களை விவசாயிகளுக்கு மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் வழங்கினார் .

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் மேகநாதன், மணிகண்டன், மாவட்ட துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், வட்டாரத் தலைவர் ராஜகோபால், கார்குடி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் சார்பில் அரண்மனை கோட்டை வாசல் பிள்ளையார் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைய வேண்டி பிரார்த்தனை நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, நகர் தலைவர் டி.எம் எஸ்.கோபி, ராமநாதபுரம் வட்டாரத் தலைவர் ராஜகோபால், மாவட்ட துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், கார்குடி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!