17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செல்லூரில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி 2-வயது மகள் பரிதாப சாவு

செல்லூரில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி 2-வயது மகள் பரிதாப சாவு

எழுதியவர்: mohan December 9, 2020, 11:45 am

மதுரை செல்லூர் அகிம்சா புரம் எட்டாவது தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் இவரது மனைவி அபிநயா 28. இவர்களுக்குஇரண்டுவயதில் ரித்திகா என்ற ஒரு மகளும் மூன்றுவயதில்சிவனேஷ்என்றமகனும் உள்ளனர். ஜெயச்சந்திரன் சென்ட்ரல் மார்க்கெட் அருகே போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார் .இவர் பல்வேறு இடங்களில் ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் வாங்கியதாக தெரிய வருகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. வழக்கம்போல நேற்றும் சண்டை நடந்தது .இதனால் மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். குழந்தைகளை கணவருடன் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ஜெயச்சந்திரன் மகன் மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷமருந்தி மயங்கி கிடந்தார். மயங்கிய நிலையில் ஆபத்தான நிலையில் அவர்கள் மூவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே இரண்டு வயது மகள் ரித்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.தந்தை ஜெயச்சந்திரனும் மகன்சிவநேசன் ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!