18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விவசாயிகளுக்கு ஆதரவான பாரத பந்த்… கீழக்கரையிலும் எதிரொலித்தது…

விவசாயிகளுக்கு ஆதரவான பாரத பந்த்… கீழக்கரையிலும் எதிரொலித்தது…

எழுதியவர்: ஆசிரியர் December 8, 2020, 1:54 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் பாஜக அரசை கண்டித்தும் வேளாண் சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக கீழக்கரை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் மகாலிங்கம் தலைமையிலும் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நகர தலைவர் பைசல் முன்னிலையிலும் கீழக்கரை வி.ஏ.ஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் முருகேசன் சி.ஐ.டி.யு ஒருங்கிணைப்பாளர் செல்வவிநாயகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ சார்பில் நதிர்,பொருளாளர் தாஜீல் அமீன்,நகர் செயலாளர் பகுருதீன்,ஜலீல் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும் பா.ஜ.க அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் விஸ்வநாதன், சார்பு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!