ரஜினி அரசியல்கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டதை வரவேற்கும் விதமாக வாடிப்பட்டி ஒன்றியம் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக சோழவந்தான்குருவித்துறை வாடிப்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ரஜினி பெயரில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள் இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் தீபன் என்ற முருகேசன் தலைமை தாங்கினார் இணைச்செயலாளர் சுரேஷ் ஒன்றிய துணைச் செயலாளர்கள் பரமன் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வாடிப்பட்டி நகரச் செயலாளர் சேகர் வரவேற்றார் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ரஜினி பெயரில் சிறப்பு பூஜைகள் செய்தனர் கோவில் முன்பாக பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார்கள் ஒன்றிய இளைஞரணி செயலாளர் செண்பகம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ரஜினி தங்கையா சந்தன கருப்பு ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் வேல்முருகன் கார்த்தி சோழவந்தான் முருகன் மோகன் மேலக்கால் முத்துராமன் குட்டி பாண்டி மலைராஜன் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் காடுபட்டி பாண்டி நன்றி கூறினார் இதில் கண்ணன் பெருமாள் விஜி செல்வம் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்…செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வரவேற்று சிறப்பு பூஜை
எழுதியவர்: mohan December 6, 2020, 10:47 am




You must be logged in to post a comment.