18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆட்சியர் ஆய்வு..

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆட்சியர் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் December 4, 2020, 8:12 pm

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜா ஆகியோர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் இன்று (04/12/2020)  ஆய்வு செய்தனர்.

புரேவி புயல் காரணமாக திருபுல்லாணி ஒன்றியம், களிமண்குண்டு, தினைக்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாயகுளம், சின்ன மாயகுளம், விவேகானந்தபுரம், பாரதிநகர் போன்ற கடலோர பகுதியில் ஏற்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகளை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தும்  புயல் காப்பகம், பள்ளிகூடம் போன்ற இடங்களில் தங்க வைத்துள்ள அப்பகுதி மீனவ மக்களை சந்தித்து உணவு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.

அப்பகுதி மக்கள் ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு துரித நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியளித்தனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!