திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் ஒருங்கிணைந்த விவசாய பயனாளிகளுக்கு திட்டம் பற்றிய பயிற்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வரவேற்று திட்டம் குறித்து பேசினார். பயிற்சியின் போது விவசாயிகளுக்கு கோ 4 ரக தீவனப்புல் , அகத்தி விதை மற்றும் பழக் கன்றுகள் வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் என்.ஏப். எஸ். எம் . திட்ட ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, காந்திகிராம வேளாண் அறிவியல் மைய பேராசிரியர் சரவணன், கால்நடை மருத்துவர்கள் ராமன், பிவின், முரளி, உதவி தோட்டக்கலை அலுவலர் முத்துராமன், வட்டார வேளாண்மை அலுவலர் ஹேமலதா, துணை வேளாண்மை அலுவலர் வேல்முருகன் , தொழில்நுட்ப பிரிவு அலுவலர்கள் சரவணன் , சிவக்குமார், சுகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
.
நிலக்கோட்டையில் விவசாயிகளுக்கு பயிற்சி
எழுதியவர்: mohan December 4, 2020, 9:38 am




You must be logged in to post a comment.