18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டி.ஆர்.இ.யு. மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் மாபெரும் கண்டன போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டி.ஆர்.இ.யு. மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் மாபெரும் கண்டன போராட்டம்

எழுதியவர்: mohan December 2, 2020, 1:11 pm

மதுரை ரெயில்வே மேற்கு நுழைவு வாயில் முன்பாக அகில இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய கோரியும் ரயில்வே கோட்டம் டி.ஆர்.இ.யு. மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் மாபெரும் கண்டன போராட்டம்.மதுரை ரெயில்வே மேற்கு நுழைவு வாயில் முன்பாக அகில இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய கோரியும் ரயில்வே கோட்டம் டி.ஆர்.இ.யு. மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டி.ஆர்.இ.யு.உதவி கோட்ட தலைவர் கார்த்திக் சங்கிலி தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர்கள் திருமலை அய்யப்பன் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம் மாநில துணை தலைவர் கோபிநாதன் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் உதவி கோட்ட மேலாளர் சரவணன் நன்றி கூறினார்.

கீழை நியூஸூக்காக மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!