18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்…

எழுதியவர்: ஆசிரியர் November 28, 2020, 3:26 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா(எ) முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்ப ரகு பரிந்துரையின்படி நகர கழக செயலாளர் பசீர் அகமது தலைமையிலும் நகர இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை மக்கள் தங்கியிருக்கும் காப்பகத்தில் சுமார் 60 மேற்பட்டவர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் துணைச் செயலாளர் ஜமால் பாருக், கென்னடி நகர் பொருளாளர் சித்திக், மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முகம்மது ஹாஜா சுஐபு, முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் முத்துவாப்பா, மாவட்ட பிரதிநிதி ஜபருல்லா, சன் சைன் அன்சாரி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் எபன் பிரவீன்குமார், அல்லாஹ்பக்ஸ்,சுபியான் மீரான், பயாஸ்,நையிம் அத்தர், உள்ளிட்ட பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!