17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரைஜெய்ஹிந்த்புரத்தில் சிறுமிக்கு திருமணம் பெற்றோர் உள்பட 3 பேர் கைது

மதுரைஜெய்ஹிந்த்புரத்தில் சிறுமிக்கு திருமணம் பெற்றோர் உள்பட 3 பேர் கைது

எழுதியவர்: mohan November 28, 2020, 10:01 am

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்த பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சிறுமிக்கு திருமணம் நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் பெண்கள் நல அதிகாரி யோகம்மாள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதிகாரி யோகம்மாள் மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரை பொன்னேரி சொக்கலிங்க நகரைச் சேர்ந்த பாண்டி மகன் வினோத்குமார் 27 வினோத் குமாரின் தாய் ராஜேஸ்வரி 45 மற்றும் உறவினர் சுமதி 43 ஆகிய மூன்று பேரையும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!