மதுரை தந்தைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனமுடைந்த மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.மதுரை குருவிக்காரன் சாலை கிருஷ்ணதேவர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சாதிக்அக்தார் 22. இவருடைய தந்தை அப்துல் அஜீஸ். தந்தைக்கு குடி பழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தை மறந்து விடும்படி மகன் தந்தைக்கு அறிவுறுத்தி வந்தார். ஆனால் தந்தை குடிப்பழக்கத்தை விடவில்லை. இதனால் மனமுடைந்த மகன் சாதிக்அக்தார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .ஆனால்சிகிச்சை பலனின்றி பரிதாபமாக்வர் உயிர் இழந்தார் .இந்த சம்பவம் குறித்து தந்தை அப்துல்அஜிஸ் கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தந்தைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனமுடைந்த மகன் விஷம் குடித்து தற்கொலை
எழுதியவர்: mohan November 28, 2020, 9:57 am




You must be logged in to post a comment.