தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் அதை தடுக்கும் விதமாக அரசு அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் தன்னலம் பாராமல் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிப்பதும், அதைப் பற்றிய விழிப்புணர்வு பிரசுங்களையும் மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத சில நபர்களால் சமூக வலைதளங்களில் நிலவேம்பு கசாயம் அருந்துவதால் மலட்டுதன்மை மற்றும் ஆண்மைக் குறைவு
ஏற்படும் என்ற வகையில் எந்த அடிப்படை ஆதாரமம் இல்லாமல் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் பயன் பெறக்கூடிய மக்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள். மேலும் பொதுநலத்துடன் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள.
இது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி கூறுகையில். “இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சி தலைவர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிந்தவர்கள், அதை பரப்பியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சினை தொடரும் பட்சத்தில் கடும் நடுவடிக்கை எடுக்கவும் அரசு தயங்காது. மேலும்
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் இருந்து பல ஆய்வுகளுக்கு பிறகே கொள்முதல் செய்யப்பட்டு, அதன் பின்பே இந்த கசாயம் வழங்கப்படுகிறது, ஆகையால் இது போன்ற மக்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய செய்திகளை பரப்புவதில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் “என்றார்.




You must be logged in to post a comment.