18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடிநீர் பற்றாக்குறை தீர்த்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர்

குடிநீர் பற்றாக்குறை தீர்த்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர்

எழுதியவர்: mohan November 25, 2020, 8:25 am

திருவண்ணாமலை மாவட்டம் , செங்கம் அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சி குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது. கிராம மக்கள் ஊராட்சிமன்றத் தலைவர் மூலமாக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் ஜெ.ஜெ.எம் நிதியின் மூலம் 30 இலட்சம் மதிப்பீட்டில், உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கான பூமிபூஜை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமையில் நடைபெற்றது.உடன், ஒன்றிய கழக செயலாளர் அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை,ஒன்றிய பிரதிநிதி முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஊர்பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!