ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் குளிர்பானம், ஊராட்சி நிர்வாகம் முகக்கவசம்
வழங்கப்பட்டது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழக கிளை சார்பில் சோப்புகள், முகக்கவசங்கள் ராமநாதபுரம், கீழக்கரை, நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி, பட்டணம்காத்தான் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பட்டணம்காத்தான் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரெட் கிராஸ் சார்பில் குளிர்பானங்களை ஊராட்சி தலைவர் சித்ரா மருது, ஊராட்சி சார்பில் முகக்கவசங்களை மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் ஊராட்சி துணைத்தலைவர் வினோத், ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர்கள் எம்.ரமேஷ் (ராமநாதபுரம்), எம்.பாலமுருகன் (மண்டபம்), உடற்கல்வி இயக்குநர் தாமரை கண்ணன், வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜன், பட்டணம்காத்தான் ஊராட்சி செயலாளர் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பட்டணம்காத்தான்தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், குளிர்பானம்
எழுதியவர்: mohan November 23, 2020, 10:05 am




You must be logged in to post a comment.