17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தூய்மைப் பணியில் நகராட்சியுடன் களம் இறங்கிய சமூக ஆர்வலர்கள்..

தூய்மைப் பணியில் நகராட்சியுடன் களம் இறங்கிய சமூக ஆர்வலர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் October 16, 2017, 6:29 pm

கீழக்கரையில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரமும், நிலவேம்பு கசாய வினியோகமும் துரிதமாக நடந்து வரும் வேலையில், கீழக்கரை பருத்திக்கார தெருவைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் அத்தெருவில் மண்டி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் ஈடுபட்டனர்.

இப்பணியில் கீழை அபு மீடியா முகநூல் செய்தியாளர் மற்றும் சமூக நல ஆர்வலளர்கள் கீழை பிரவீன், கீழை அஸாருதீன், கீழை நஸ்ருதீன், சங்கர் ஆகியோர்களால் தூய்மை பணியில் ஈடுபட்டதுடன், டெங்கு விழிப்புணர்வு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

இந்த பணி பாராட்டுக்குரிய செயலாகும். ஆனால் இப்பணிகளை உதாரணமாக எடுத்து மற்ற பிற தெருக்களிலும், பொதுமக்கள் அவரவர் இருப்பிடங்களை சுத்தமாக வைத்திருக்க களம் இறங்க வேண்டும். தனி மனிதன் ஒழுக்கம் மேம்படும் பொழுது சமுதாயம் தானாக முன்னேற்றம் அடையும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!