18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவதானம் பகுதியில் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன் மனைவி படுகாயம்

தேவதானம் பகுதியில் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன் மனைவி படுகாயம்

எழுதியவர்: mohan November 20, 2020, 10:01 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள வடக்கு தேவதானம் பகுதியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது வடக்கு தேவதானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 57 அவரது மனைவி பாக்கியலட்சுமி வயது 55 இருவரும் கூலித்தொழிலாளர்கள் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர் கடந்த மூன்று தினங்களாக பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது அதேபோல் நகரில் பல்வேறு பகுதிகளிலும் நீர் சூழ்ந்துள்ளது இந்த நிலையில் ராஜேந்திரன் வீடு மண் சரிவு ஏற்பட்டு சரிந்து விழுந்ததில் இருவரும் படுகாயமடைந்து இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்மழையின் காரணமாக சாஸ்தா கோவில் பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது இதை மாவட்ட ஆட்சியர் கண்ணன் பார்வையிட்டு திரும்பி வரும்பொழுது தேவதானம் பகுதியில் இதுபோன்ற மழை காலங்களில் பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு முன் வர வேண்டும் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் கோரிக்கை வைத்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!